வீடியோ கான்பெரன்ஸ் முறைக்கு டிரம்ப் மறுப்பு..! டிரம்ப் – பிடென் இடையேயான இரண்டாம் கட்ட விவாதம் ரத்து..!

Author: Sekar
10 October 2020, 6:38 pm
trump_biden_updatenews360
Quick Share

அக்டோபர் 15’ஆம் தேதி அமைக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடென் இடையேயான இரண்டாவது ஜனாதிபதி விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா உள்ள நிலையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளருடன் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் விவாதம் நடத்த மறுத்ததை அடுத்து அமைப்பாளர்கள் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

ஒரு அறிக்கையில், வெள்ளிக்கிழமை புளோரிடாவின் மியாமாயில் நடத்த திட்டமிடப்பட்ட இரண்டாவது விவாதம் அகற்றப்படும் என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 3 ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக டென்னசி நாஷ்வில்லில் அக்டோபர் 22’ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த விவாதத்திற்குத் தயாராகி வருவதாக சிபிடி தெரிவித்துள்ளது.

டிரம்பிற்கும் பிடனுக்கும் இடையிலான முதல் ஜனாதிபதி விவாதம் கடந்த செப்டம்பர் 29 அன்று ஓஹியோவின் கிளீவ்லேண்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

துணை ஜனாதிபதி வேட்பாளர்களான மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையிலான ஒரு விவாதம் அக்டோபர் 7’ஆம் தேதி உட்டாவின் சால்ட் லேக் சிட்டியில் நடந்தது.

அக்டோபர் 8’ம் தேதி, சம்பந்தப்பட்ட அனைவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக, மியாமியில் அக்டோபர் 15’ஆம் தேதி திட்டமிடப்பட்ட இரண்டாவது ஜனாதிபதி விவாதம் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் நடத்தப்படும் என்று சிபிடி அறிவித்திருந்தது. இந்நிலையில் டிரம்ப் வீடியோ கான்பெரன்ஸ் விவாதத்திற்கு மறுத்ததால் சிபிடி ஒரு அறிக்கையில், இரண்டாவது விவாதத்தை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Views: - 45

0

0