ஆரம்பப் பள்ளிக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு… 18 பிஞ்சுக் குழந்தைகள் உள்பட 21 பேர் சுட்டுக்கொலை… 18 வயது இளைஞர் வெறிச்செயல்…!!

Author: Babu Lakshmanan
25 May 2022, 10:32 am
Quick Share

அமெரிக்காவில் ஆரம்ப பள்ளிக்குள் புகுந்து இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்ஸாஸ் அருகே யுவால்டே கவுண்டி என்ற நகரில் சாண்டி ஹீக் என்னும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்குள் புகுந்த ஒரு நபர், கையில் இருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினார். இந்த தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்தனர்.

இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது :- 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் பள்ளியில், 18 வயதுடைய இளைஞர் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் 14 மாணவர்கள், 1 ஆசிரியர்,மேலும் இருவர் என 18 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கியால் சுட்ட அந்த இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர், என்றார்.

குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பைடன் ஜப்பான் சென்றுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டெக்சாஸ் மாகாண கவர்னருடன் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 1406

0

0