இந்தியாவில் கைது செய்யப்பட்ட பாதிரியாருக்கு ஆதரவாக செயல்படுமா அமெரிக்கா..? வெளியுறவுச் செயலர் பிளிங்கன் கருத்து..!

Author: Sekar
12 March 2021, 5:48 pm
stan_swamy_updatenews360
Quick Share

83 வயதான கத்தோலிக்க பாதிரியார் ஸ்டான் சுவாமி, மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தியாவில் அவர் மீது நடைபெற்று வரும் வழக்கை விசாரிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரசின் வெளியுறவுக் குழுவின் முன் பேசும்போது பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிளிங்கன், இது தொடர்பான மேலும் தகவல்களைக் கேட்டு, தாங்கள் இது குறித்து விசாரிப்போம் என்று கூறினார்.

அமெரிக்க காங்கிரசின் சர்வதேச பொருளாதாரக் கொள்கை மற்றும் இடம்பெயர்வு துணைக்குழுவின் துணைத் தலைவரான ஜுவான் வர்காஸ், பிளிங்கனிடம் கேள்வி எழுப்பியபோது, இந்த தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்ட சுவாமி 130’க்கும் மேற்பட்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும், இது நம்ப முடியாத வகையில் நடக்கும் அநீதி என்றும் கூறினார்.

ஸ்டான் சுவாமி ஜேசுட் ஆர்டர் ஆப் ப்ரீஸ்ட்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறிய வர்காஸ், தானும் அந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளதாகக் கூறினார்.

தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ராஞ்சியில் கைது செய்யப்பட்டு மகாராஷ்டிராவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்டான் சுவாமி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் புனே சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 69

0

0