ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு ஒப்புதல்..! கலைந்து போகிறதா பிடெனின் அதிபர் கனவு..?

12 November 2020, 7:40 pm
Pennsylvania_ballot_counting_UpdateNews360
Quick Share

அமெரிக்க மாகாணமான ஜார்ஜியாவில் பதிவான மில்லியன் கணக்கான வாக்குகளை திரும்பவும் கையால் என்ன உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்க தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன், டிரம்பை விட 14,000’க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ளாத டொனால்ட் டிரம்ப், தேர்தல் முறைகேடு குறித்த பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஜார்ஜியாவின் வெளியுறவுத்துறை செயலர் பிராட் ராஃபென்ஸ்பெர்கர், இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பதால், 159 மாவட்டங்களிலும் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்த உள்ளதாக கூறினார்.

மாநிலத்தில் வெளியான தேர்தல் முடிவுகளின் தேசிய முக்கியத்துவம் காரணமாக இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். எனினும், வாக்குகளை கையால் மறுபரிசீலனை செய்வது ஜனாதிபதித் தேர்தலுக்கு மட்டுமே என்று அவர் கூறினார். ஜார்ஜியாவில் 16 அதிபர் வாக்குகள் உள்ளன. இங்கு பெரிய அளவில் வாக்காளர் மோசடி மற்றும் தேர்தல் முறைகேடு நடந்ததாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் மாநில அதிகாரிகள், இதுவரை அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிடென் 538 அதிபர் வாக்குகளில் 279 வாக்குகளைப் பெற்றுள்ளதால், இங்கு உள்ள 16 வாக்குகளில் 10 வாக்குகள் டிரம்புக்கு சாதகமாக மாறினால் பிடெனின் அதிபர் கனவு கரைந்து போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜார்ஜியாவுடன் சேர்ந்து, டிரம்ப் பென்சில்வேனியா, மிச்சிகன், நெவாடா, அரிசோனா மற்றும் விஸ்கான்ஸிலும் மறு வாக்கு எண்ணிக்கைக்கு முயற்சி செய்து வருகிறார்.

இதனால் அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.

Views: - 19

0

0