மாடர்னா கொரோனா தடுப்பூசி: 2வது டோஸ் போட்டுக்கொண்டார் கமலா ஹாரிஸ்…!!

27 January 2021, 5:06 pm
kamala harris - updatenews360
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மாடர்னா தடுப்பூசியின் 2வது டோசை போட்டுக்கொண்டார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2.6 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக்கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியும் பணியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் வெற்றிக்கண்டனர். இதில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வந்தது அந்நாட்டு மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
அமெரிக்க அதிபரான ஜோ பைடன், தான் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என உறுதியளித்தார்.

அந்தவகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த டிசம்பர் 21ம் தேதி மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக்கொண்டார். துணை அதிபரான கமலா ஹாரிஸ் டிசம்பர் 29ம் தேதி வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில், மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக் கொண்டார். கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார். இந்நிகழ்வு டிவியில் நேரலையாக ஒளிபரப்பானது.

இந்நிலையில், கமலா ஹாரிஸ் தனது இரண்டாம் டோஸ் கொரொனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அனைவரும் அவரவர் முறை வரும் போது தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதுவே உங்கள் உயிரைக் காக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0