நாங்களும் நீந்துவோம்.. எங்களுக்கும் நீந்த தெரியும்.. விஷ பாம்பால் குடும்பத்தினர் ஷாக்

19 January 2021, 12:27 pm
Quick Share

வீட்டிலிருந்த நீச்சல் குளத்தில், உலகின் அதிக விஷமுள்ள பாம்பு ஒன்று நீந்தியதை கண்டு, வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலானது.

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். அது உண்மைதான். கையில் எவ்வளவு பெரிய ஆயுதம் வைத்திருப்பவர் கூட எதிரே ஒரு பாம்பு சீறி வந்தால் அலறி அடித்து ஓடுவார். அதற்கு காரணம் பாம்பின் விஷம்தான். அப்படிப்பட்ட கடும் விஷம் கொண்ட பாம்பு ஒன்று, வீட்டின் நீச்சல் குளத்தில் நீந்தி கடக்க, அந்த வீடியோ வைரலாகி உள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டின், அடிலேய்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நீச்சல் குளத்தில், அதிக விஷத் தன்மை கொண்ட ஈஸ்டர்ன் பிரவுன் பாம்பு ஒன்று நீந்தியுள்ளது. இதனை வீட்டின் மேல்தளத்திலிருந்து பார்த்து, அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டார். உடனே பாம்பு பிடிக்கும் குழுவினருக்கும் தகவல் தெரிவித்தார்.

பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், பாம்பை பத்திரமாக மீட்டு, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். அந்த வீடியோவை அவர், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய, அது வைரலாக பரவி வருகிறது. தூரத்திலிருந்து பார்க்கும் போதே பயம் ஏற்படுத்தும் வகையில் இருக்கும் அந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. கண்டிப்பாக உங்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் இருந்திருக்கும். அப்போது எப்படி அலறினீர்கள் ஞாபகம் இருக்கிறதா?

ஆஸ்திரேலிய அருங்கட்சியாகத்தின் கூற்றின்படி, உலகில் மற்ற அனைத்து பாம்புகளை விடவும், இது மிகவும் விஷத்தன்மை கொண்டதாம். இந்த பாம்பு கடித்தால், உடனடி ரத்தப்போக்கு ஏற்பட்டு, பக்காவாதம் ஏற்பட்டு, முடிவில் மரணம் தானாம்.. ஐயோ!

Views: - 0

0

0