‘இது எங்க ஏரியா…உள்ள வராதே’: Google ட்ரோனும் கோவக்கார காகமும்…இணையத்தில் கவனம் ஈர்த்த வைரல் வீடியோ!!

Author: Aarthi Sivakumar
27 September 2021, 3:44 pm
Quick Share

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் ட்ரோன் மூலம் உணவு பொருட்களை டெலிவெரி செய்யும் புதிய திட்டம் ஒன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் காகங்களின் தாக்குதலால் ட்ரோன்கள் தீப்பிடித்து வருகின்றன.

சில நிறுவனங்கள் தங்களது உணவு பொருட்களை ட்ரோன் மூலம் டெலிவெரி செய்துவருகின்றனர் . இவ்வாறு உணவுப்பொருட்களை டெலிவெரி செய்ய பயன்படுத்தப்படும் டிரோன்களை பறவைகள் தாக்கி வருகின்றன. பறவைகள் தொடர்ந்து ட்ரோன்கள் மீது தாக்குதல் நடத்துவதால் ட்ரோன் மூலம் உணவு டெலிவெரி செய்யும் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

எதற்காக பறவைகள் பறக்கும் டிரோன்களை தாக்குகின்றன, டிரோன்கள் மூலம் கொண்டுவரப்படும் உணவுகளை வேட்டையபட பறவைகள் தாக்குகின்றனவா அல்லது டிரோன்களால் வரக்கூடிய சத்தத்தால் பறவைகள் கோபமடைந்து அவற்றை தாக்குகின்றனவா என்று பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் இயல்பானவை என்றாலும் காகங்கள், பருந்துகள் உட்பட மற்ற பறவைகள் ட்ரோன்களை தாக்கிவருவது சற்று சிந்திக்க வேண்டியவையாக உள்ளது . மனிதனின் கண்டுபிடிப்புகள் மனிதனுக்கு வளர்ச்சியை கொடுத்தாலும் மற்ற உயிரினங்களுக்கு அவை அச்சுறுத்தலாகவே உள்ளது.

Courtesy

காலம் மாற மாற மனிதனும் மனிதக்கண்டுபிடிப்புகளும் இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அளித்து வருகின்றது . மனிதனின் கண்டுபிடிப்புகள் இயற்கைக்கும் , மற்ற உயிரினங்களுக்கும் தீமை அளிக்காத வகையில் இருக்க வேண்டுமே தவிர அவற்றை அளிக்கும் வகையில் இருக்க கூடாது.

காபி விநியோகிக்கும் ட்ரோன் மீது தாக்குதல் நடத்திய காகம் என்ற தலைப்பில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பலர் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

Views: - 561

0

0