இந்திய கலை நுட்பத்துடன் தயாராகும் அபுதாபியின் முதல் இந்துக் கோவில்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

10 November 2020, 7:00 pm
full_temple_view_baps_abudhabi_updatenews360
Quick Share

அபுதாபியின் முதல் இந்து கோவிலின் நுட்பமான சிற்பங்களை செதுக்கும் பணியில் 2,000’க்கும் மேற்பட்ட சிற்பிகள் பணிபுரியும் நிலையில், ஆன்லைனில் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த 2022’ஆம் ஆண்டில் கோவில் அனைவருக்கும் திறக்கப்படும் போது அதன் ஆடம்பரம் மெய்சிலிர்க்கும் வகையில் இருக்கும் என்பதை இந்த புகைப்படங்கள் நமக்கு உணர்த்துகிறது.

கோவிலைக் கட்டும் அமைப்பான தி பாப்ஸ் சுவாமிநாராயண் சன்ஸ்தா, புகைப்படங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய ஊடகமான தி நேஷனலில் வெளியிட்டது.

ஒரு மத்திய கிழக்கு பாலைவனத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோவில் அதன் சுவர்களில் பண்டைய கால அடிப்படையிலான கதைகளை அலங்கரிக்கிறது.

அபு முரேகா பகுதியில் அமைந்துள்ள கோயிலின் செதுக்கல்களில் இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், யானைகள், ஒட்டகங்கள் கூட சித்தரிக்கப்படுகின்றன.

“சமூகத்தின் ஆதரவு மற்றும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமையின் வழிகாட்டுதலுடன், கோவில் கட்டுமான பணிகள் முன்னேறி வருகின்றன” என்று பாப்ஸ் இந்து மந்திர் செய்தித் தொடர்பாளர் அசோக் கோடெச்சா கூறினார்.

இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்ட பளிங்கு மற்றும் ராஜஸ்தானில் இருந்து மணற்கல் ஆகியவற்றைக் கொண்டு இந்த சிற்ப வேலைகள் இந்தியாவில் செய்யப்படுகின்றன.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் வெவ்வேறு இடங்களில் கைவினைஞர்கள் 25,000 கன அடி வரை சிற்பங்களை செதுக்கியுள்ளனர்.

கோவிலின் தலைவரும், பாப்ஸில் உள்ள சர்வதேச உறவுகளை மேற்பார்வையிடுபவருமான சுவாமி பிரம்மவிஹாரி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த கோவில் பணிகளை கண்காணித்து வருகிறார்.

இறுதி வரைபடம் கோவில் வளாகத்தை சுற்றி வரும் நீர்நிலைகள், ஒரு பெரிய ஆம்பிதியேட்டர், நுழைவாயிலின் பக்கவாட்டில் இரண்டு சிறிய நீர்வீழ்ச்சிகள், ஒரு நூலகம் மற்றும் ஒரு சமூக மையம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

இந்த வடிவமைப்புகள் இந்தியாவில் ஒருவர் பார்க்கும் கோவில்களை நினைவூட்டுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கூட அவர்கள் எஃகு அல்லது இரும்பு வலுவூட்டல்களைப் பயன்படுத்த மாட்டார்கள்.

மார்பிள் நெடுவரிசைகள் மற்றும் மணற்கல் கட்டமைப்புகள் போன்ற அடிப்படை பொருட்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பொருத்தப்படும்.

டெல்லியில் அக்ஷர்தாம் போன்ற இதே பாணியிலான பல கோவில்களை பாப்ஸ் குழு கட்டியுள்ளது.

இந்த ஆலயம் அனைத்து மதங்களின் அமைதியான சகவாழ்வுக்காக நிற்கும். மேலும் அனைத்து தரப்பு மக்களையும் தங்கள் விசுவாசத்தை கடைபிடிக்க அழைக்கும் எனக் கூறப்படுகிது.

Views: - 28

0

0