ரூ.7.5 லட்சம் பணத்திற்காக இப்படியெல்லாமா செய்வாங்க – வைரலாகும் வீடியோ

15 April 2021, 12:48 pm
Quick Share

பாம்புகள் நிறைந்த பாத் டப்பில் இருக்கும் இளைஞர் குறித்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் முன்னணி யூடியூப் சேனல் ஒன்று 14 நிமிடங்கள் கால அளவிலான வீடியோவை வெளியிட்டு உள்ளது. அதில் 22 வயதான ஜிம்மி டொனால்டுசன், தனது இரண்டு நண்பர்களுடன் பங்கேற்று உள்ளார். பாம்புகள் நிறைந்த பாத் டப்பில் சிறிது நேரம் இருப்பவர்களுக்கு, 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் ரூ. 7.5 லட்சம்) வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மற்ற இரண்டு நண்பர்கள், இந்த சவாலில் இருந்து பின்வாங்க, கடைசியாக வந்த தபர் மட்டும் இந்த சவாலில் பங்கேற்பதாக தெரிவித்தார். சவாலில் குறிப்பிட்டு உள்ளபடி, 30 வினாடிகள், பாம்புகள. நிரம்பிய பாத் டப்பில் இருந்து சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், பரிசுத் தொகையான ரூ. 7.5 லட்சத்தையும் வென்று சாதனை படைத்தார்.

இந்த வீடியோ, தற்போதுவரை 30 மில்லியன் முறை நெட்டிசன்களால் பார்க்கப்பட்டு உள்ள நிலையில், 1.2 மில்லியன் அளவிலான லைக்குகளையும் பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த யூடியூப் வீடியோ, நெட்டிசன்களால் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் , மேலும் இதுபோன்ற பல ஆபத்து மற்றும் அதிர்ச்சி சம்பவங்கள் நிறைந்த பல்வேறு விதமான சவால்கள், இளைய தலைமுறையினரிடையே பிரபலம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கரப்பான் பூச்சிகள் அதிகம் உள்ள பெட்டிக்குள் இருப்பது போன்ற சவால்கள் தற்போது பிரபலம் அடைந்து வருகின்றன.

Views: - 33

0

0