ஸ்பெயினில் வீடுகளை தீக்கிரையாக்கிய எரிமலைக் குழம்பு; பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றம்

Author: kavin kumar
10 October 2021, 9:49 pm
Quick Share

எரிமலை சீற்றத்தால் வானில் படர்ந்த சாம்பல் சற்று குறைந்ததையடுத்து லா பல்மா தீவில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் லா பால்மா தீவில் உள்ள எரிமலை கடந்த 19 ஆம் தேதி வெடித்தது. சில நாட்கள் அமைதி காத்த எரிமலை, மீண்டும் லாவா என்னும் எரிமலைக் குழம்பை கொப்பளிக்கத் தொடங்கியுள்ளது. இந்த எரிமலைக் குழம்பு ஆறு போல ஓடி அட்லாண்டிக் கடலை நோக்கிச் சென்றது. லாவா ஓடிய பாதையில் இருந்த 600க்கும் அதிகமான வீடுகள், வாழைத்தோட்டங்கள், வழிப்பாட்டு தலங்கள் கடுமையாக சேதமடைந்தன. லாவா குழம்பு சீற்றத்துடன் வெளியேறுவதை அப்பகுதி மக்கள் அச்சம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். எரிமலை வெடிப்பால் அப்பகுதியில் வசித்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதற்கிடையே எரிமலை சீற்றத்தால் வானில் படர்ந்த சாம்பல் சற்று குறைந்ததையடுத்து, லா பல்மா தீவில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கேனரி தீவுகளின் மற்ற விமான நிலையங்களும் திறக்கப்பட்டன.ஸ்பெயினில் எரிமலை வெடித்ததில், எரிமலைக் குழும்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது.

Views: - 508

0

0