குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே ஜாக்கிரதை..!! (வீடியோ)

14 February 2020, 10:52 pm
Danger Fight- updatenews360
Quick Share

சவால் என்பது செய்ய முடியாத ஒரு செயலை செய்து காட்டுவதே ஆகும். ஆனால் தற்போது எதற்கெல்லாம் Challenge வருவதென்று விவஸ்தையில்லாமல் போயிடுச்சு.

அந்த வகையில் ஆரம்பத்தில் வந்த ஐஸ் பக்கட் சேலஞ்ச் பின்னர் கிகி சேலஞ்ச், பிட்னஸ் சேலஞ்ச் உட்பட ஏராளமான சேலஞ்சுகளை பிரபலங்கள் பிரபலப்படுத்தினர்.

ஆரம்பத்தில் பள்ளிகளில் ஏதோ ஒரு செயலை மற்றவர்கள் சொல்லித் தெரியத்தான் அது பரவலாகும். ஆனால் தற்போது சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தும் சிலரால், தவறான செயல்கள் ஈஸியாக பரவி விடுகிறது.

அப்படி வந்த அடுத்த ஒரு வீடியோ, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிப்பதாக அமைந்துள்ளது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் பள்ளி வளாகத்தில் இரண்டு மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவனை தள்ளி விட ஏதுவாக ஒரு விளையாட்டை உருவாக்கியுள்ளனர். இது விளையாடும் போது மாணவன் கீழே விழுந்தால் தலை மற்றும் முதுகு பகுதியில் அதிக ஆபத்தை விளைவிக்கும்.

எனவே பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் கவனமாக இருக்க இந்த வீடியோ முன்னெச்சரிக்கையாக அமைந்துள்ளது.