வடகொரியாவில் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை: அதிபர் கிம் ஜோங் உன் எச்சரிக்கை…!!

12 November 2020, 12:26 pm
kim jan unn - updatenews360
Quick Share

வடகொரியாவில் உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வடகொரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 புயல்கள் மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதாரத் தடை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடுமையான பஞ்சம், உணவுத் தட்டுப்பாடு வடகொரியில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், உணவை வீணடிப்பது பொருளாதாரத்தை வீணடிப்பதற்கு சமம். மேலும், உணவு பொருட்களை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், எந்த நிகழ்வில் எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் பட்டியலிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 22

0

0