நேரலையில் நிருபரின் மைக்கை பிடிங்கி கொண்டு ஓடிய நாய்! வைரல் வீடியோ

6 April 2021, 3:30 pm
Quick Share

தனியார் டிவியில் பணியாற்றும் பெண் நிருபர் ஒருவர், நேரலையில் பேசிக் கொண்டிருந்த போது, நாய் ஒன்று அவரின் மைக்கை பிடுங்கி கொண்டு ஓடியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பத்திரிக்கையாளர்கள் தங்கள் பணியை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செய்து வருகின்றனர். களநிலரவத்தை தொகுத்து வழங்கும் பலருக்கும் தொல்லைகள் அதிகம் வரும். புயல், மழை காலங்களில் அவர்கள் படும் சிரமங்களை நேரலையில் நீங்களே பல முறை பார்த்திருக்க வாய்ப்பு அதிகம். அப்படி நடக்கும் பல சம்பவங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விடும். அப்படி ஒரு சம்பவம் தான் ரஷ்யாவில் நடந்திருக்கிறது.

ரஷ்யாவில் தனியார் தொலைக்காட்சியான மிர் டிவியில், நட்டாஷா சேக்ஸ்கினா என்ற பெண் நிருபவராக பணியாற்றி வருகிறார். மாஸ்கோவில் வசந்த கால வருகைக்காக பொதுவெளியில் நின்று, நட்டாஷா மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். அது டிவியில் நேரலையாக ஒளிபரப்பானது. அப்போது கோல்டன் ரீட்ரைவர் இனத்தை சேர்ந்த நாய் ஒன்று வாக்கிங் வந்தது. அப்போது அந்த நாய் குறித்து நட்டாஷா பேச, அருகில் வந்த நாய், மைக்கை பிடுங்கி கொண்டு ஓடியது. நாய் பின்னாடியே நடாஷாவும் ஓட, டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் சிரித்து உருண்டனர்.

இவ்வாறு நடப்பது இது முதன் முறை அல்ல. முன்பு ஒருமுறை இதே நாய், நட்டாஷாவின் மைக்கை பிடிங்கி இருக்கிறதாம். தற்போது மைக் மீட்கப்பட்டாலும், அது வேலை செய்யவில்லையாம். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 0

0

0

Leave a Reply