என் குடும்பத்தினருக்கு என்ன ஆனதோ? மன உளைச்சலில் ரஷீத்கான்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2021, 4:27 pm
Rashid Khan Feels - Updatenews360
Quick Share

தனது குடும்பத்தினரை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கமுடியுவில்லை என்று ஆப்கன் வீரர் ரஷித் கான் கவலை தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் தனது குடும்பத்தினர் ஆப்கானில் இருந்து மீட்க முடியவில்லை என பிரபல சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் கவலையில் உள்ளதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

நானும் ரஷீத் கானும் இது குறித்து நீண்ட நேரம் பேசினோம். அப்போது அவர் தன் குடும்பத்தை ஆப்கானிலிருந்து வெளியே கொண்டு வர முடியவில்லை என்று கவலைப்பட்டார். மேலம் அவர் மனரீதியாக பாதிப்பில் உள்ளதாகவும் பீட்டர்சன் கூறினார்.

ரஷீத் கான் இப்போது இங்கிலாந்தில் ஹண்ட்ரட் கிரிக்கெட்டில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். உலகத் தலைவர்களே ஆப்கானையும் மக்களையும் காப்பாற்றுங்கள் என்று அவர் உலகத்தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

Views: - 199

0

0