கொரோனாவில் இருந்து மீண்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: வெள்ளை மாளிகை தகவல்…!!

Author: Aarthi
13 October 2020, 8:43 am
President-Trump - updatenews360
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளார் என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.

முன்னதாக, அதிபரின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். கொரோனா தொற்று பரிசோதனை முடிவில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

4 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் திங்கள் கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகை திரும்பினார். தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அதிபர் டிரம்பின் ஊடக செயலாளர் கெய்லேய் மைக்எனானியிடம், வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் கான்லே கூறும்பொழுது, அதிபருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Views: - 36

0

0