வுஹானுக்குச் செல்லாமலேயே வுஹான் ஆய்வை முடித்த உலக சுகாதார அமைப்பு..! கடுப்பில் உலக நாடுகள்..!

28 August 2020, 7:27 pm
Wuhan_Wet_Market_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ் தொற்று நோயின் தோற்றம் குறித்து ஆராய சீனாவிற்கு அனுப்பப்பட்ட உலக சுகாதார அமைப்பின் குழு வுஹானுக்கு சென்று ஆய்வு செய்யாமலேயே தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் தற்போது வரை தொற்றுநோய்களின் தோற்ற இடமாக கருதப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு அனுப்பிய குழுவின் இந்த நடவடிக்கை மற்றொரு சர்ச்சையைத் தூண்டியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவலின் தோற்றத்தையும் முன்னேற்றத்தையும் சமாளிப்பதில் கடுமையாகப் போராடும் உலக நாடுகள் இந்த விவகாரத்தால் சீனா மீது எரிச்சலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய சீனாவுக்கு வருகை தந்த குழு வுஹானைச் சேர்ந்த விஞ்ஞானிகளுடன் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொண்டதாக, உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

“இந்த குழு சீன சகாக்களுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டது மற்றும் தொற்றுநோயியல் ஆய்வுகள், உயிரியல் மற்றும் மரபணு பகுப்பாய்வு மற்றும் விலங்குகளின் சுகாதார ஆராய்ச்சி பற்றிய புதுப்பிப்புகளைப் பெற்றது” என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் செய்தியாளர்களிடம் கூறினார். இதில் வுஹான் வைராலஜிஸ்டுகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் மேற்கொள்ளப்பட்ட வீடியோ விவாதங்களும் அடங்கும்.

சுவாரஸ்யமாக, சீன அரசாங்க கணக்குகள் முன்னர் கிறிஸ்டியன் லிண்ட்மேயரின் கருத்தை மேற்கோள் காட்டி, கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவின் வுஹானில் தோன்றியதல்ல எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த ஆண்டு மே 6’ஆம் தேதி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருந்த டிவீட்டில், உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர், சீனாவுடன் இணைப்பு இல்லாமல் டிசம்பரில் பிரான்சில் வெளியான கொரோனா பாதிப்பு மற்றும் நவம்பர்-டிசம்பர் 2019’இல் வித்தியாசமான நிமோனியா வழக்குகளை மீண்டும் விசாரிக்க நாடுகளை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த கடுமையாக நிலைப்பாடுகள் காரணமாக இறுதியில் உலக சுகாதார அமைப்பு கொரோனா தோன்றிய வுஹானில் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள உறுதியளித்திருந்த நிலையில், தற்போது அத்தகைய ஆய்வை மேற்கொள்ளாமல், பெயரளவில் சீன விஞ்ஞானிகளுடன் மட்டும் பேசிவிட்டு திரும்பியது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Views: - 33

0

0