ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய உயர் அதிகாரி – நையப்புடைத்த பெண் ஊழியர் : வைரலாகும் வீடியோ

15 April 2021, 11:17 am
Quick Share

தனக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பிய உயர் அதிகாரியின் மீது புத்தகங்களை தூக்கி எறிந்தது மட்டுமல்லாது, அவரை துடைப்பத்தால் அடித்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சீனாவில் உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்றிவரும் பெண் ஊழியருக்கு, அவரது உயர் அதிகாரி, தொடர்ந்து ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர், உயரதிகாரியின் கேபினுக்கு சென்று அங்கு இருந்த புத்தகங்களை கொண்டு அவர் மீது தாக்குதல் நடத்தினார். அதுமட்டுமல்லாது, அங்கு இருந்த துடைப்பத்தை கொண்டு, அவர்மீது தாக்குதல் நடத்தினார். அந்த அதிகாரி, இதுபோன்று பல பெண்களுக்கும் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியுள்ளது குறித்த ஆதாரத்தையும் அவர் வெளியிட்டார். இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த பெண்ணை, ஹீரோ ஆக பாவித்து புகழ்ந்து வருகின்றனர்.

தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, எத்தகைய விளைவுகளை சந்திக்க முடியும் என்று அந்த பெண் யோசித்து இருக்க வேண்டும்,இனிமேல், அந்த பெண்ணால், அங்கு வேலை பார்க்க முடியுமா என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து, சீனாவின் முன்னணி பெண்ணிய ஆர்வலர் லு பின் கூறியதாவது, பெண்கள் தங்களுக்கு இத்தகைய துன்பங்கள் நேரும்போது, அமைதியாக இருக்காமல், பொதுவெளியில் தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான், இந்த விவகாரத்தில் தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 16

0

0