ஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..!!!

Author: Udayachandran
27 July 2021, 4:13 pm
Kosovo Gold 1-Updatenews360
Quick Share

ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் அந்த கண்ணீருக்கு பின்னால் உள்ள சோகமான சாதனையை விபரிக்கிறது இந்த தொகுப்பு.

ஆதிக்கவாதிகளால் ஒடுக்கப்படும் மக்கள் திருப்பி பதிலடி கொடுக்க கையில் எடுக்கும் முதல் ஆயுதம் விளையாட்டுதான். இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கிய மறு ஆண்டே விளையாட்டு மூலம் வீழ்த்தியது.

1948ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ஹாக்கி விளையாட்டில் பிரிட்டனை வீழ்த்தி இந்திய கொடியை பிரிட்டனின் கொடிக்கு மேல் பறக்கவிட்டனர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு இந்தியா கொடுத்த முதல் சவுக்கடியே அதுதான்.

இது இந்தியாவுக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளும் ஆதிக்கவாதிகளை விளையாட்டால் அடக்கியுள்ளனர். கரீபியர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்த நிறவெறியர்களுக்கு க்ளைவ் லாயிட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் கொடுத்த பதிலடிதான 1975ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை வெற்றி,

தற்போது டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியிலும் ஆதிக்கவாதிகளை அடக்கி வைத்து பாதிக்கப்பட்ட ஒருவர் வெற்றி பெற்றதுதான் பேசு பொருளாக மாறியுள்ளது. கொசோவோ நாட்டை சேர்ந்த தீஸ்திரி கிராஸ்னிக் என்பர் ஜூடோவில் 48 கிலோ எடைபிரிவில் ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார்.

போட்டியில் வென்ற உடனே என்ன செய்வதென்று தெரியாமல் பூரிப்பில் உறைந்த நிலைக்கு சென்ற க்ராஸ்னிக் கண்ணீர் சிந்தி அழுதார். இந்த புகைப்படம் இணையம் முழுவதும் ஆதிக்கத்தை செலுத்தியது.

அதற்கு காரணம் தெரியுமா? கொசோவா என்ற நாடு இருப்பது பலருக்கும் தெரியாது.. ஐரோப்பாவில் செர்பியாவுக்கு அருகில் 18 லட்சம் மக்களை மட்டுமே கொண்டுள் சிறய நாடாகும். 13ஆம் நூற்றாண்டுக்கு முன்பு செர்பியாவின் ஆளுமையில் இருந்த கொசோவோ பின்னர், துருக்கி ஆளுமைக்குள் வந்தது.

துருக்கியில் கீழ் வந்ததும் கொசோவோ நாட்டிற்கு பெரும் பிரச்சனையாக மாறியது. ஏனென்றால், செர்பியாவின் கீழ் இருந்த போது, கிறிஸ்துவர்கள் நிரம்பியிருந்ததனர். ஆனால் துருக்கியின் கீழ் வந்ததால் இஸ்லாமிய பயன்பாடுகள் கொசோவோவின் பாராம்பரியமாக மாறத் தொடங்கியது.

பின்னர் 19ஆம் நூறற்ண்டின் போது துருக்கி பலவீனமாக மீண்டும் செர்பியாவின் கீழ் கொசோவோ வந்தது. இதையடுத்து தான் பிரச்சனை ஆரம்பித்தது. செர்பிய அரசு தங்களின் பண்பாடு, பாரம்பரியத்தை உயர்வாக நினைத்து கொசோவோவின் அல்பேனிய இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது.

இரண்டாம் உலக போருக்கு பின்னால் உலக நாடுகளின் அழுத்தத்தால் கொசோவோ நாட்டிற்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. ஆனால் லகான் செர்பியாவின் வசமே இருந்தது. செர்பியாவின் அப்போதைய அதிபராக 1989ஆம் ஆண்டு ஸ்லோபடன் மிலோசெவிக் அதிபரானார்.

அதிபரான பின் முதல் நடவடிக்கையே கொசோவோவின் தன்னாட்சி உரிமையை ரத்து செய்தார். இதனால் அடக்குமுறைகள் அவிழ்க்கப்பட்டன. கொசோவோவின் புரட்சி படை செர்பியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது.

போர் தொடங்கி, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகள் ஆகினர். போர் தொடக்கத்தில்லே அமெரிக்க போன்ற நாடுகள் கொசோவோவுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர். பின்னர் 2008ஆம் ஆண்டு தான் கொசோவோ விடுதலை பெற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பல நாடுகளும் கொசோவோவை அங்கீகரிக்க செர்பியா மட்டும் பகை நாடாகவே கருதி வருகிறது.

இந்த நிலையில் தான் அடக்குமுறைகளை அடக்க விளையாட்டு என்ற யுக்தியை கையில் எடுத்தது கொசோவோ. ஆம், முதன் முதலாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது கொசோவா. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கொசோவோ நாட்டை சேர்ந்த மஜ்லிந்தா கேல்மந்தி என்பவர் ஜூடோவில் பங்கேற்று கொசோவோ நாட்டிற்காக முதல் தங்கத்தை வென்று கொடுத்தார்.

இதே போல தற்போது நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் அதே ஜுடோ விளையாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தீஸ்திரி க்ராஸ்னிக் என்ற வீராங்கனை.

இரண்டு பேருக்கும் பயிற்சியளித்தவர் ஒரே நபர்தான்.. அவர் தான் டிரிட்டன் டோனி குகா. கொசோவோ நாட்டை சேர்ந்த இவர் ஜூடோவில் கைதேர்ந்தவர்.. 1992ஆம் ஆண்டு பார்சிலோனா ஒலிம்பிக் நடைபெற்ற போது இவர் பதக்கம் வெல்வார் என நினைத்திருந்த நேரத்தில் செர்பியாவுக்கான போர் நடைபெற்றதால், கொசோவா வீரர்கள் செர்பியாவுடன் இணைந்து ஒலிம்பிக் செல்ல கூடாதென முடிவெடுக்கப்பட்டது.

Tokyo 2020 Olympics - Judo - Women's 57kg - Gold medal match - Nippon Budokan - Tokyo, Japan - July 26, 2021. Nora Gjakova of Kosovo celebrates after winning gold against Sarah Leonie Cysique of France REUTERS/Annegret Hilse

இதனால் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை தவற டிரிட்டன் டோனி பயிற்சியாளராக மாறினார். கொசோவோ போரின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மற்றும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த குழந்தை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்து வருகிறார். அப்படி வந்து வென்றவர்கள்தான் கேல்மந்தியும், கிராஸ்னிக்கும்.

Driton Kuka për IJF-në zbulon metodat prapa suksesit të Kosovës në xhudo -  KOHA.net
டிரிட்டன் டோனி (பயிற்சியாளர்)

இப்படி தங்களுடைய நாட்டை அங்கீகரிக்க அடக்குமுறைகளை அவிழத்த செர்பியாவுக்கு சவுக்கடி கொடுத்த தருணத்தை நினைத்து கிராஸ்னிக் தனது கண்களை ஈராமாக்கியுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் ஒருவரின் கண்ணீர் துளிகள் மட்டுமல்ல, ஒரு நாட்டின் மொத்த கண்ணீருமே அடங்கியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

Views: - 299

0

0