உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13.42 லட்சமாக அதிகரிப்பு…!!
18 November 2020, 6:55 amஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.89 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,59,15,358 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,89,23,128 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 42 ஆயிரத்து 693 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,56,49,251 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,00,251 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு- 1,16,80,945, உயிரிழப்பு – 2,54,099, குணமடைந்தோர் – 70,71,014, இந்தியாவில் கொரோனா பாதிப்பு – 89,12,704, உயிரிழப்பு – 1,31,031, குணமடைந்தோர் – 83,33,013, பிரேசிலில் கொரோனா பாதிப்பு – 59,11,758, உயிரிழப்பு – 1,66,699, குணமடைந்தோர் – 53,61,592, பிரான்ஸ் கொரோனா பாதிப்பு – 20,36,755, உயிரிழப்பு – 46,273, குணமடைந்தோர் – 1,43,152, ரஷியாவில் கொரோனா பாதிப்பு – 19,71,013, உயிரிழப்பு – 33,931, குணமடைந்தோர் – 14,75,904 பேர்.
தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் வரிசையில் ஸ்பெயின் முதலிடத்திலும், இங்கிலாந்து, அர்ஜென்டினா, இத்தாலி, கொலம்பியா, மெக்சிகோ, பெரு, ஜெர்மனி நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.