உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.42 கோடியாக உயர்வு..!!

18 May 2021, 9:07 am
turkey corona - updatenews360
Quick Share

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 16.42 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.42 கோடியை தாண்டி உள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 164,255,718 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,29,73,670 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34,03,717 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 17,878,331 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 161

0

0