கட்சிக்குள் அதிகரிக்கும் கலகக் குரல்கள்..! மாவோ வழியில் குரல்ளையை நசுக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்..!

5 September 2020, 6:43 pm
Xi_Jinping_Updatenews360
Quick Share

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் மிக அதிக அளவாக, சுமார் 24 காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஜி ஜின்பிங்கின் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 12’க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஜின்பிங்குடன் நெருங்கிய தொடர்பில் உள்ள மூத்த அரசியல்வாதி ஒருவர் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம், கத்தியின் முனையை உள்நோக்கித் திருப்பி, எலும்புகளிலிருந்து விஷத்தை அகற்றுவதன் மூலம் குணப்படுத்தி, ஊழல்களில் சிக்குண்டுள்ள நாட்டின் நீதி முறையை சுத்தப்படுத்துவதில் ஜின்பிங் முனைப்புடன் உள்ளார் எனத் தெரிவித்துள்ளார். இதில் சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் அடங்குவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யான் திருத்தம் இயக்கம் பாணியிலான அரசியல் சுத்திகரிப்பு :
“யான் திருத்தம் இயக்கம்” பாணி அரசியல் சுத்திகரிப்பு சென் யிக்சினால் ஜூலை 8 அன்று மத்திய அரசியல் மற்றும் சட்ட ஆணையத்தின் கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது.

யான் திருத்தம் இயக்கம் என்பது 1942’ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தூய்மைப்படுத்தல் திட்டம் ஆகும். இதில் யான் திருத்தம் பிரச்சாரத்தின் போது ஆயிரக்கணக்கான சீன கம்யூனிஸ்டுகள் அகற்றப்பட்டனர்.

கட்சியில் உள்ள தலைவர்கள் கம்யூனிஸ்ட் சீனாவின் தந்தை மாவோ சேதுங்குடன் தங்கள் சிந்தனையை ஒன்றிணைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். கட்சி மற்றும் மாவோவின் அதிகாரப்பூர்வ எண்ணத்திலிருந்து விலகிச் செல்லக் கூடாது. இல்லையெனில் அவர்கள் வெளியேற்றம், சித்திரவதை மற்றும் மரணத்தை கூட எதிர்கொள்ள நேரிடும். இது தான் கடந்த கால கம்யூனிஸ்ட் சீனாவின் “யான் சுத்திகரிப்பு இயக்கம்” ஆகும்.

ஜியின் முதல் ஐந்து ஆண்டுகளில் 1.34 மில்லியன் அதிகாரிகள் அகற்றப்பட்டனர் :
கடந்த மாதம், ஜியின் நெருங்கிய உதவியாளரும், பொதுப் பாதுகாப்புக்கான மிக மூத்த துணை அமைச்சருமான வாங் சியாஹோங் அரசியல் ஒழுக்கம் குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

ஜியின் ஆட்சியில் அரசியல் ஒடுக்குமுறை புதியதல்ல. அவர் 2012’ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான பின்னர் தனது முக்கிய அரசியல் போட்டியாளர்களை திட்டமிட்டு நீக்கியுள்ளார்.

ஜியின் முதல் ஐந்து ஆண்டுகளில், 1.34 மில்லியன் அதிகாரிகள் ஊழல் தொடர்பாக வீழ்த்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

வுஹான் வைரஸ் வெடிப்பு, பொருளாதாரத்தை சீர்குலைத்தல் மற்றும் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பிற நாடுகளுடன் அதிகரித்து வரும் பதட்டங்களை தவறாகக் கையாள்வது தொடர்பாக சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், 2018’ஆம் ஆண்டில் கால வரம்பற்ற முறையில், அதிகாரத்தில் இருக்க ஜி மேற்கொண்ட முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0