கொரோனா பரப்பியதாக இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை: வியட்நாம் அரசு அதிரடி..!!

By: Aarthi
7 September 2021, 7:35 pm
Quick Share

வியட்நாம்: கொரோனா தொற்றை பரப்பியதாக இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் நாட்டில் ஏப்ரல் மாதத்தில் சில ஆயிரங்களாக இருந்த மொத்த கொரோனா பாதிப்பு தற்போது 4.80 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்தவகையில், கொரோனா நோயை பரப்பியதாக வியட்நாம் நாட்டில் இளைஞர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தொற்று வியட்நாமில் பரவத் தொடங்கியப் போது அந்நாட்டு அரசு மேற்கொண்ட திறமையான நடவடிக்கைகளால் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சிறப்பாக கொரோனாவை கையாண்டதாக வியட்நாமுக்கு பாராட்டுகளும் குவிந்தது. தற்போது, நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சில ஆயிரங்களாக இருந்த மொத்த கொரோனா பாதிப்பு தற்போது 4.80 லட்சத்தை கடந்துள்ளது. தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து கா மவ் நகருக்கு திரும்பிய லீ வான் ட்ரி என்னும் நபர், 21 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் சுற்றித் திரிந்துள்ளார். இவரால் 8 பேருக்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக லீ வான் ட்ரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை மீறியதாக வியட்நாமில் ஏற்கனவே இருவருக்கு தலா 18 மாதங்கள் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Views: - 309

0

0