தலைக்கேறிய மதுபோதையில் ஆற்றில் குதித்த இளைஞர் : உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய சிறுவன்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2022, 4:44 pm
Drunken Man Survive by Child -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே குடும்பத்தினரை மிரட்ட ஆற்றுப் பாலத்தின் மேல் இருந்து குதித்த போதை ஆசாமியை உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய சிறுவன் உட்பட 2 பேருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெயராமன். இவர் தனது குடும்பத்தில் உள்ளவர்களை மிரட்டும் நோக்கத்தில் சத்தியமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு நிக்க முடியாத அளவில் மதுபோதையில் இருந்தார்.

திடீரென சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தில் இருந்து கீழே குதித்த அவர் அங்கிருந்த மரக்கிளையில் சிக்கி தவித்து உள்ளார். இதை கண்ட ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் சத்தியமங்கலம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தீயணைப்புத்துறையினர் வர காலதாமதம் ஆனதால் பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் உட்பட இரண்டு பேர் தனது உயிரை பணையம் வைத்து ஆற்றுப்பாலத்தில் குதித்து ஜெயராமனை உடனடியாக மீட்டு ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் மது போதை ஆசாமியை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மது போதையில் தன்னை மறந்து குடும்பத்தின் மீது அக்கறை இல்லாமல் குதித்த இளைஞரை தன் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய சிறுவன் உட்பட 2 பேருக்கு பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 595

0

1