இன்று பல இளைஞர்கள் கண்களைச் சுற்றி கருவளையம் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக மொபைல், கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பயன்படுத்துவதால் இது ஏற்படுகிறது. மேலும் போதுமான தூக்கம் இல்லாத காரணத்தினாலும், மன அழுத்தம் காரணமாகவும் கண்களைச் சுற்றி கருவளையம் வரலாம். கருவளையத்தை போக்குவதற்கு என்னதான் கடைகளில் காஸ்ட்லியான ப்ராடக்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் எளிமையான வீட்டு வைத்தியம் மூலமாகவே இதனை நாம் சரி செய்யலாம். அப்படி நம்முடைய வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு பொருள்தான் உருளைக்கிழங்கு சாறு. உருளைக்கிழங்கு சாறு இருந்தால் போதும் உங்களுடைய கருவளையம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
உருளைக்கிழங்கு சாறு கருவளையத்தை குறைப்பதற்கு எப்படி உதவுகிறது? உருளைக்கிழங்கு சாற்றில் நமது கண்களை சுற்றி உள்ள தோலுக்கு நன்மை தரும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை:-
வைட்டமின் C: சருமத்தை வெண்மையாக்குவதற்கு உதவும் ஒரு ஆன்டி-ஆக்சிடன்ட் இது.
வைட்டமின் B: சருமத்தில் உள்ள வீக்கத்தை குறைத்து சமமான சரும தொனியை தருகிறது.
இதையும் படிக்கலாமே: இறால் பொலிச்சது: அட அட அட… இந்த மாதிரி ஒரு அசைவ உணவு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க!!!
பொட்டாசியம்: பொட்டாசியம் சத்து சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து சருமம் எப்போதும் ஈரப்பதமாக இருப்பதை உறுதி செய்கிறது.
கேட்டகோலேஸ்: இது ஒரு வகையான என்சைம். இது சருமத்தை வெண்மையாக்குகிறது.
இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சேர்ந்து கருவளையத்தால் ஏற்பட்ட நிற மாற்றத்தை சரி செய்து, வீக்கத்தை குறைத்து, மினுமினுப்பான சருமத்தை தருகிறது.
கண்களுக்கு உருளைக்கிழங்கு சாறு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
வீக்கம் குறைகிறது: உருளைக்கிழங்கு சாற்றில் மாவு சத்து அதிகம் இருப்பதன் காரணமாக கண்களைச் சுற்றி உள்ள வீக்கத்தை குறைப்பதற்கு இது ஒரு அற்புதமான இயற்கை தீர்வாக அமைகிறது. இதற்கு ஒரு காட்டன் பந்தை உருளைக்கிழங்கு சாற்றில் முக்கி எடுத்து கண்களை சுற்றி உள்ள பகுதியில் ஒத்தி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வது அந்த பகுதியில் உள்ள அதிகப்படியான திரவத்தை வெளியேற்றி, வீக்கத்தை குறைக்கும்.
கருவளையத்திற்கு தீர்வு உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் கண்களை சுற்றி உள்ள கருமையை போக்குகிறது. இதற்கு உருளைக்கிழங்கு சாற்றை ஒரு காட்டன் பேடில் வைத்து கண்கள் மீது அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
சுருக்கங்களைப் போக்குகிறது ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் அதிகம் காணப்படும் உருளைக்கிழங்கு சாறு கருவளையங்கள், மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் ஆகியவற்றை போக்குகிறது.
கண்களுக்கான ஐ மாஸ்க்
வைட்டமின் C மற்றும் B6 உள்ள இந்த சாறு நமக்கு மினிமினுப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை அளிக்கிறது. உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இதனை ஒரு சிறந்த ஐ மாஸ்க்காக மாற்றுகிறது. இதற்கு உருளைக்கிழங்கை மசித்து அதில் ஆலிவ் எண்ணெய் கலந்து கண்களில் ஒரு ஐ மாஸ்காக தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.