தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக தனது கலை பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது விடாது கடின உழைப்பின் மூலம் இந்த ஒரு நிலைக்கு வந்த இவர், மெரினா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
பல வெற்றி படங்களை கொடுத்து கோலிவுட்டின் டாப் நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் மிக சுமாரான விமர்சனத்தையே பெற்றது. அதற்கு முன் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் கலெக்ஷன் அள்ளி சாதனை படைத்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் அயலான், மாவீரன் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மேலும் ஒரு பிரபல முன்னணி இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புது படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் உடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.