தளபதி விஜய்க்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்..!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2023, 2:00 pm
Quick Share

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக தனது கலை பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது விடாது கடின உழைப்பின் மூலம் இந்த ஒரு நிலைக்கு வந்த இவர், மெரினா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

பல வெற்றி படங்களை கொடுத்து கோலிவுட்டின் டாப் நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் மிக சுமாரான விமர்சனத்தையே பெற்றது. அதற்கு முன் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் கலெக்‌ஷன் அள்ளி சாதனை படைத்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் அயலான், மாவீரன் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மேலும் ஒரு பிரபல முன்னணி இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புது படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் உடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது.

Views: - 370

2

0