சினிமா / TV

அட்டகத்தியா? கெத்தா? இனிமேல் இப்படி கூப்பிடுங்க தினேஷே சொல்லிட்டார்!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் தான் அட்டகத்தி தினேஷ். இவர் தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடக்க கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த ஈ என்ற திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமான தினேஷ் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஆடுகளம் திரைப்படம் மற்றும் மௌனகுரு உள்ளிட்ட திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடித்த அட்டகத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் அட்டகத்தி தினேஷ் என்றே அடையாளம் பெயராக அழைக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

அதன்படி பண்ணையாரும் பத்மினியும் , திருடன் போலீஸ் , தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், விசாரணை, ஒரு நாள் கூத்து ,கபாளி, களவாணி, மாப்பிள்ளை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அண்மையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்..

உலக இருதய தினத்தை முன்னிட்டு சென்னை வடபழனியில் அமைந்துள்ள சிம்ஸ் உயர் மருத்துவமனையில், ‘சிம்ஸ் வாக் 4 ஹார்ட்’ என்ற பெயரில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட பெருநடை நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் தினேஷ் கலந்துகொண்டார்.

அந்த விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அட்டகத்தி தினேஷிடம் பத்திரிகையாளர்கள் இனிமேல் நீங்க அட்டகத்தி தினேஷா? இல்ல கெத்து தினேஷா? என கேள்வி கேட்டதற்கு… மக்கள் கூப்பிடுறது தான். அவங்க மனசார விருப்பப்பட்டு ஆசையா எதை கூப்பிடுகிறார்களோ அதுவாவே நான் இருக்கிறேன்.

இதையும் படியுங்கள்: குட் நியூஸ்…. எமோஷ்னல் ஆன கன்னிகா – சந்தோஷத்தில் குதித்த சினேகன் – குவியும் வாழ்த்துக்கள்!

ஆனால், எனக்கு தினேஷ் என்ற பெயரே போதும். அட்டகத்தியும் கெத்து தான்…. கெத்தும் கெத்து தான் என பதிலளித்தார். இப்படி ஒரு அன்பை நீங்கள் எதிர்பார்த்தது உண்டா என கேள்வி எழுப்பியதற்கு ஆம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்தேன். ஆனால், இப்பதான் எனக்கு கிடைச்சிருக்கு என தினேஷ் பதில் அளித்திருந்தார்.

Anitha

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.