தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் ஆக பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடி மிக சிறந்த பாடலாசிரியராக பெரும் புகழ்பெற்றிருக்கிறார். இவர் 1997 ஆம் ஆண்டு புத்தம் புது பூவே என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுத ஆரம்பித்தார் பிறகு பாண்டவர் பூமி திரைப்படத்தில் மிகச்சிறந்த பாடல்களை எழுதி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.
சினேகன் தொடர்ந்து சார்லி சாப்ளின், மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், பகவதி, சாமி, கோவில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதி சிறந்த பாடல் ஆசிரியராக வலம் வந்து கொண்டிருக்கிறார் .
இதனிடையே சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு பெரும் புகழ்பெற்றார். தமிழ் நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கன்னிகா சினேகன் இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது தற்போது தான் கர்ப்பமாக இருப்பதை சினேகனுக்கு சர்ப்ரைஸ் செய்து அவரை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தி இருக்கிறார். தங்களது திருமணத்தின் போது கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்த வாசகத்தோடு நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி என்ற பாடல் வரிகளுடன் இந்த கர்ப்பமான செய்தியை அறிவித்து எல்லோருக்கும் மகிழ்ச்சி கொடுத்துள்ளனர். இதை அடுத்து சினேகனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
0
0