மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர், நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார்.
இதனிடையே, சாண்டியை விவாகரத்து செய்த பிறகும் கூட அவருடனும் அவரது குடும்பத்துடனும் நல்ல நட்பை காஜல் பசுபதி தொடர்ந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் பசுபதி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தைரியமாக கருத்துக்களை பதிவு செய்வார். அந்தவகையில், காஜல் பசுபதி, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் காஜல் பசுபதி கூறியதாவது, வாய்ப்பு கேட்ட தன்னிடம் தனது நண்பர் பேசிய விதம் குறித்து வெளிப்படுத்தி காஜல் பசுபதி வேதனைப் பட்டுள்ளார்.
அதாவது காஜல் பசுபதியின் நெருங்கிய தோழியின் காதலருக்கு ஒரு தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவருடன் நல்ல நட்பு உள்ளதால் அவரிடம் சீரியலில் நடிக்க ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என கேட்டு சொல்லுமாறு காஜல் பசுபதி உதவி கேட்டுள்ளார். அதுவரை காஜல் பசுபதியிடம் மரியாதையாக பேசிய அந்த நண்பர், வாய்ப்பு கேட்டப் பிறகு நள்ளிரவில் போன் செய்து, தனக்கு இப்படி ஒரு பெண் வேண்டும் என சில அடையாளங்களை கூறி அசிங்கமாக பேசியதாக காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இதை ஏன் அவன் தன்னிடம் கேட்க வேண்டும் என்று யோசித்த காஜல் பசுபதி, வாய்ப்பு கேட்டால் நண்பன் கூட இப்படிதான் பேசுவான் போல என நினைத்து அதன்பிறகு அந்த நண்பனிடம் பேசுவதையே முற்றிலும், தவிர்த்து விட்டதாக காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த சம்பவத்துக்கு பிறகு யாரிடமும் வாய்ப்பு கேட்பதில்லை என்றும், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், வேண்டும் என்றால் சம்பளத்தில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம் என்றும், வேறு எதிலும் அட்ஜெஸ்ட் செய்ய முடியாது என நடிகை காஜல் பசுபதி உறுதியாக தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.