பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து ஓடிடி தளத்திற்காக பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் விலகியதையடுத்து தற்போது சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வாரூணி, ஷாரீக், அபிநய் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் வனிதாவும் வீட்டை விட்டு அனுப்பும்படி பிக்பாஸிடம் கதறி அழுது தானாக வெளியேறினார்.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை லாஸ்லியா மரியநேசன் வைல்ட் கார்டு எண்ட்ரி வழியாக செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சீசன் 3ல் கவினுடனான காதல், நட்பு என ரகளையாக வந்தவர் தான். தற்போது இருவரும் பிரிந்து விட்டனர். இதனையடுத்து லாஸ்லியா தமிழில் ஃப்ரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளார்.
இந்த நிலையில் யாரையும் காதல் வலையில் வீழ்த்துவதில் வல்லவராக இருக்கும் லாஸ்லியா, சிங்கிளா இருக்கும் சிம்புவிற்கு காதல் வலை வீசுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.