மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான “தக் லைஃப்” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. “மணிரத்னம் இயக்கிய மோசமான திரைப்படம்” என பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர். குறிப்பாக திரிஷாவின் கதாபாத்திரமும் அவரின் மீது கமல்ஹாசன், சிம்பு ஆகிய இருவருமே மோகம் கொள்வதும் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.
இந்த நிலையில் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தால் கமல்ஹாசன் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது “தக் லைஃப்” திரைப்படத்தினை 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என நெட்பிலிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்தார் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன்.
ஆனால் தற்போது “தக் லைஃப்” திரைப்படத்திற்கு சரியான வரவேற்பு இல்லாத நிலையில் இத்திரைப்படத்தை 28 நாட்களில் ஓடிடியில் வெளியிட அனுமதி கொடுக்க வேண்டும் என நெட்பிலிக்ஸ் நிறுவனம் கமல்ஹாசனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாம். ஒரு வேளை கமல்ஹாசன் அனுமதி கொடுக்காத பட்சத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையில் 30 கோடியை குறைத்துவிடுவோம் எனவும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளதாம்.
ஏற்கனவே கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத நிலையில் கர்நாடகாவில் இத்திரைப்படம் வெளியாகவில்லை. இதனால் கமல்ஹாசனுக்கு ரூ.20 கோடி நஷ்டம் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் கமல்ஹாசன் அனுமதி கொடுக்காத பட்சத்தில் ரூ.30 கோடியை குறைத்துவிடுவோம் என கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.