நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: இதை எப்படி சொல்றதுன்னு தெரியல… Cooku with Comali-யை விட்டு விலகிய வெங்கடேஷ் பட் வெளியிட்ட Video..!(Video)
ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு. இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.
மேலும் படிக்க: வயித்து பொழப்புக்காக நாங்க காட்டுகிறோம்.. பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய சகிலா..! (Video)
இந்நிலையில், சாய்பல்லவி குறித்து ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பிரபல அழகு சாதன கிரீம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தங்களது நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்குமாறு சாய்பல்லவியை அணுகியுள்ளனர். அந்த விளம்பரத்தில், நடிக்க சாய்பல்லவிக்கு ரெண்டு கோடி வரை சம்பளம் தருவதாகவும் தெரிவித்துத்து உள்ளனர். ஆனால், இதற்கு நீங்கள் எவ்வளவு காசு கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் என்று மறுத்துள்ளார். சாய்பல்லவி சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் மேக்கப்போடாமல் இயல்பான தோற்றத்தில் இருக்க விரும்புபவர். அழகு சாதன பொருட்களால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்த சாய் பல்லவி அது சார்ந்த விளம்பரங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.