சென்னை: நடிகர் பிரபுதேவா, வடிவேலு சந்தித்துக்கொண்ட போது சிங் இன் த ரெய்ன் என பிரபுதேவாவுடன் சேர்ந்து வடிவேலு பாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிரபுதேவா நடிப்பில் 2001-ல் மனதை திருடி விட்டாய் என்ற திரைப்படம் வெளியானது. இதில், வடிவேலுவும் நடித்திருப்பார். இந்தப் படத்தில் இருவரும் இடம்பெறும் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன.
ஒய் ப்ளட் சேம் ப்ளட் என வடிவேலு கூறும் டயலாக் இன்றைக்கும் மீம் மெட்டீரியலாகவும், டைமிக் டயலாக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
மனதை திருடி விட்டாய் படத்தில் ‘சிங் இன் த ரெய்ன்’ என ஒரு காட்சியில் வடிவேலு பாடல் பாடுவார். இந்த பாடல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிரபுதேவாவும், வடிவேலுவும் திடீரென சந்தித்த நிலையில், பிரபுதேவாவுக்காக அவருடன் சேர்ந்து வடிவேலு சிங் இன் த ரெய்ன் பாடலை பாடியுள்ளார்.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் வடிவேலு, பிரபுதேவாவைக் கட்டிப் பிடித்து ‘சிங் இன் த ரெயின்’ பாடலைப் பாடி, மகிழ்ந்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பிரபுதேவா ‘நட்பு’ என ஒரே ஒரு வார்த்தையில் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.