90 கிட்ஸ்களின் பேவரைட் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலாசிரியர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். 2005 இல் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பின்னர் 2014ல் வெளியான சலீம் படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து மிகச்சிறந்த நடிகராக பெயர் வாங்கித்தந்தது. நாகர்கோவிலை சேர்ந்த இவர் பாத்திமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மீரா, லாரா என இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர்.
இப்படியான நேரத்தில் தான், கடந்த 19ம் தேதி மூத்த மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மிகுந்த வேதனைக்குள்ளாகியது.
இந்நிலையில் அண்மையில் ரத்தம் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷனுக்கு பல தடைகளை தாண்டி விஜய் ஆண்டனி கலந்து கொண்டது மக்களால் வரவேற்கப்பட்டது. மேலும், படங்களை தாண்டி விஜய் ஆண்டனி இசை கச்சேரி நடத்துவதிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், மகளின் இறப்பிற்கு பின்னர் சமீப காலங்களில் விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருப்பதை கண்ட ஒருவர் ஹிட்லர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த, விஜய் ஆண்டனி எந்த காரணமும் இல்லை. செருப்பு அணிய தோன்றவில்லை செருப்பு அணிய வேண்டும் என்று தோன்றினால் மீண்டும் அணிந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.