கடந்த சில வருடங்களாக அரசியல், பிக்பாஸ் என பிஸியாக இருந்த கமல்ஹாசன் இப்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். நான்கு வருட காத்திருப்பிற்கு பிறகு கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் இணைந்து, விஜய்சேதுபதி, பக்த் பாசில், சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, வட இந்தியா என எல்லா இடங்களிலும் விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் மிக பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷின் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை இல்லாதளவு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இன்னும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுவதால், விக்ரம் திரைப்படம் உலகளவில் செம்ம வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரூ. 120 முதல் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள விக்ரம் படத்தின் வசூல் விவரம் தொடர்ந்து வெளியாகியுள்ளது.
இப்படம் உலகம் முழுவதும், இதுவரை ரூ. 317 கோடி வரை வசூலித்துள்ளதாம். படம் வெளியாகி 12 நாட்களை கடந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 12 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. எந்த படமும் வெளியாகவில்லை என்பதால், வரும் நாட்கள் இதன் வசூல் அதிகரிக்கும் என்று திரையுல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.