12 நாட்கள் கடந்தும் குறையாத விக்ரம் வசூல்.. உலகம் முழுவதும் இத்தனை கோடிகள் வசூலா.?

Author: Rajesh
15 June 2022, 4:50 pm
Quick Share

கடந்த சில வருடங்களாக அரசியல், பிக்பாஸ் என பிஸியாக இருந்த கமல்ஹாசன் இப்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். நான்கு வருட காத்திருப்பிற்கு பிறகு கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் இணைந்து, விஜய்சேதுபதி, பக்த் பாசில், சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, வட இந்தியா என எல்லா இடங்களிலும் விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் மிக பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷின் பக்கா ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை இல்லாதளவு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இன்னும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுவதால், விக்ரம் திரைப்படம் உலகளவில் செம்ம வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரூ. 120 முதல் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள விக்ரம் படத்தின் வசூல் விவரம் தொடர்ந்து வெளியாகியுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும், இதுவரை ரூ. 317 கோடி வரை வசூலித்துள்ளதாம். படம் வெளியாகி 12 நாட்களை கடந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 12 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. எந்த படமும் வெளியாகவில்லை என்பதால், வரும் நாட்கள் இதன் வசூல் அதிகரிக்கும் என்று திரையுல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 547

4

1