சாய் பல்லவியுடன் காதலா.? விழுந்து, விழுந்து கவனிக்கும் பாகுபலி நடிகர்.. வைரல் வீடியோ இதோ.!

Author: Rajesh
15 June 2022, 7:00 pm

மலையாளத்தில் வந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, வந்த சூட்டிலியே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது இவர் நடித்து வெளியாகவுள்ள விராட பர்வம், படத்தில் நக்ஸலைட்டாக நடித்து உள்ளார். தொடர்ந்து படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி. அவரை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சாய் பல்லவிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். மேடைகளில் சாய் பல்லவி வந்தாலே அவரின் பெயரை தான் கோஷமிடுவார்கள்.

இந்த படத்தின் ஹீரோவான ராணா, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகை சாய்பல்லவியுடன் கலந்து கொண்டு வருகிறார். நடிகை சாய்பல்லவியுடன் ரசிகர்கள் செல்பி எடுக்க முயற்சிப்பதால், அந்த சமயத்தில் நடிகர் ராணா பவுன்சராக மாறி நடிகை சாய்பல்லவியை பாதுகாக்கிறார் . மேலும் அந்த வீடியோவில், விளம்பர நிகழ்ச்சியின்போது மழை பெய்யவே சாய் பல்லவிக்கு குடை பிடித்து நின்றார் ராணா, இப்படி விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டும் அல்ல படப்பிடிப்பு தளத்திலும் ராணா தனக்கு பவுன்சராக இருந்ததாக பேட்டி ஒன்றில் சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் சாய்பல்லவியை, ராணா காதலிக்கிறார? என்ற சந்தேகத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!