தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் திரை பின்பலம் எதுவுமே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனது திறமையாலும் கனவாலும் இன்று திரைத்துறையில் நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். முதன் முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆனார்.
இவர் தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலில் 2012 ஆம் ஆண்டு மெரினா திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.
மேலும் படிக்க: பல முறை சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்டேன்… ஆனால், மேடையில் வருத்தப்பட்ட வடிவுக்கரசி..!
பின்னர் தனுஷ் உடன் 3 படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. தொடர்ந்து மனங்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன், காக்கிசட்டை, மான்கராத்தே, வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை, மாவீரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து இன்று நட்சத்திர நடிகராக முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார்.
தற்போது சிவகார்த்திகேயன் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.
அதாவது சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக இருந்து கொண்டே தன்னுடைய வாழ்க்கையை எப்படி சமாளிக்கிறார்? எப்படி அதை எதிர்கொள்கிறார்? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மூன்று குழந்தைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதும் எவ்வளவு கலகலப்பாக அந்த குடும்பம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆசையாக இருக்கிறது எனக்கு கீர்த்தி சுரேஷ் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.