பல முறை சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்டேன்… ஆனால், மேடையில் வருத்தப்பட்ட வடிவுக்கரசி..!

Author: Vignesh
21 May 2024, 8:30 pm
vadivukkarasi-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் சுமார் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். அத்துடன் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1979ல் வெளியான கன்னிப் பருவத்திலே என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இப்படத்தில் வடிவுக்கரசி நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

vadivukkarasi-updatenews360

மேலும் படிக்க: அந்த போட்டோக்களை டெலிட் செய்த கீர்த்தி சுரேஷ்.. ROCKET வேகத்தில் வைரலான லீக் போட்டோ..!

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். பின்னர் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவுக்கரசி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். குறிப்பாக ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்தில் கிழவியாக நடித்து மிரட்டினார்.

vadivukkarasi-updatenews360

மேலும் படிக்க: திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா?.. மனம் திறக்கும் பிரகாஷ் ராஜ் முதல் மனைவி லலிதா குமாரி..!

இந்நிலையில், வடிவுக்கரசி இப்போது பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக பாட்டியாக நடித்து வருகிறார். படங்களை தாண்டி இப்போது சின்னத்திரையிலும் நடித்து வரும் வடிவுக்கரசி சூரி முக்கிய வேடத்தில் நடைபெற்றிருக்கும் கருடன் படத்திலும் நடித்துள்ளார். கருடன் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில், நடைபெற்றது. அதில், பட குழுவினரை தாண்டி சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார்.

அப்போது, மேடையில் வடிவுக்கரசி பேசும் போது பலருடன் நடித்து விட்டேன். ஆனால், இன்னும் சிவகார்த்திகேயனுடன் மட்டும் நடிக்க முடியவில்லை. பலமுறை நான் சிவகார்த்திகேயனிடம், இது குறித்து பேசினேன். எப்போதுமே, அடுத்த படத்தில் நடித்துவிடலாம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாரே தவிர இன்னமும் வாய்ப்பு தரவில்லை. உடனே சிவகார்த்திகேயன் மேடைக்கு ஓடி வந்து வடிவுக்கரசியின் கைகளை பிடித்து அடுத்த படத்தில் கண்டிப்பாக நீங்கள் நடிக்க போகிறீர்கள் என்று சொல்லிவிட்டு சென்றார்.

Views: - 99

0

0