ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம்.. தலையில் சுமந்து காணிக்கை செலுத்திய முதலமைச்சர்..!!
Author: Udayachandran RadhaKrishnan5 அக்டோபர் 2024, 10:18 காலை
ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த நிலையில் வழக்கத்தின் அடிப்படையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்தார்.
அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க மனைவி புவனேஸ்வரியுடன் கோவில் எதிரில் இருக்கும் பேடி ஆஞ்சநேய சுவாமி கோவில் வந்த முதல்வருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அவருக்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் பரிவட்டம் கட்டி பட்டு வஸ்திரங்களை வெள்ளி தட்டில் வைத்து முதல்வர் தலை மேல் ஏற்றி வைத்தனர்.
அங்கிருந்து பட்டு வஸ்திரங்களுடன் கூடிய வெள்ளி தட்டை சுமந்து நடந்து சென்ற சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.
தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்ட சந்திரபாபு நாயுடுவிற்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
0
0