பேரீச்சம் பழம் மற்றும் கோதுமை சேர்த்து செய்யப்படும் இந்த அல்வா, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வாங்க இந்த கோதுமை டேட்ஸ் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பேரீச்சம் பழம் – 50(கிராம்)
கோதுமை – 1 கப்
பால் -1/4 லிட்டர்
சர்க்கரை – 400(கிராம்)
முந்திரி – 25(கிராம்)
நெய் – 150( கிராம்)
செய்முறை:
*முதலில் பேரீச்சை பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிடவும்.
* இன்னொரு அடுப்பில் நெய் மற்றும் கோதுமை சேர்த்துத் தளர்ச்சியாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
* பிறகு சர்க்கரை மூழ்கும் வரை நீர் விட்டுக் கரைத்து பாகாகி வரும் போது , பாலோடு வெந்து திரண்டிருக்கும் பேரீச்சையை நன்கு மசித்து, சர்க்கரை பாகில் சேர்க்கவும்.
* பிறகு அதில், வறுத்த கோதுமை மாவு மற்றும் மீந்திருக்கும் நெய் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.
* நன்றாக நெய் பிரிந்து கரண்டியிலிருந்து வழுக்கி விழும் நிலையில் வந்தவுடன், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி விடவும்.
* மிகவும் சுவையான, கமகமக்கும் கோதுமை பேரீச்சை அல்வா தயார்.
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
This website uses cookies.