*சுரைக்காயில் அதிக நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுகின்றது. சுரைக்காயினுடைய பாகங்கள் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவையாகும்.
* சுரைக்காயில் உள்ள சத்துக்கள்:
நீர்ச்சத்து – 96.07, இரும்புச்சத்து – 3.2, பாஸ்பரஸ் – 0.2, கார்போஹைட்ரேட் – 2.3, தாது உப்பு – 0.5, புரதம் – 0.3, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்பி போன்ற சத்துக்கள் சுரைக்காயில் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை.
*சுரைக்காயை கூட்டு, பொரியல், குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். சுரைக்காய் குடல் புண்களை ஆற்றும் மற்றும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய இரத்த சோகையை குணப்படுத்தி, இரத்தை சுத்திகரிக்கும்.
*உடல் சூடு காரணமாக கண் எரிச்சல், கண்வலி போன்றவை ஏற்பட்டால் சுரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
* உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சுரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். சுரைக்காயை நன்கு அரைத்து அதில் ஒரு சிட்டிகை உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து சரியான உடற்பயிற்சி செய்து வந்தால் நாளடைவில் உடல் எடை குறைவதை உணர்வீர்கள்.
*சிலருக்கு உணவுகளை மாறி சாப்பிடும் போதும் , மன அழுத்தத்தாலும் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்கள் ஏற்படுகிறது . இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் விரைவிலேயே குணமாகும்.
*சுரைக்காய் அதிகம் நார்ச்சத்து கொண்டது . குடலில் அல்சர் புண்கள் உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். வயிற்றில் ஏற்படும் பாதிப்புகள், மலச்சிக்கல் போன்றவை தீரும். மேலும் மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக செயல்படுகிறது.
*சுரைக்காய் ஜூஸை குடிப்பதால் நாம் சாப்பிட கூடிய உணவுகள் அனைத்துமே எளிதில் ஜீரணம் அடையும்.
*சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது. ஆகவே சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுவதால் சிறுநீர் நன்கு வெளியேற உதவும். மேலும் சிறுநீர் குழாயில் உள்ள தொற்றுக்களை போக்கவும் உதவுகிறது.
*உணவில் அடிக்கடி சுரைக்காயை சேர்த்துக் கொள்வதால் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கிருமிகளை அழிக்கிறது.
*சுரைக்காய் விதைககள் மூலம் செரிமான மண்டலத்தை தூய்மைப்படுத்தலாம் என்றும் அதன் முலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. சுரைக்காயில் 80 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் மட்டுமே இருப்பதால் அஜீரணம், மெட்டபாலிசம் போன்றவற்றைத் துரிதப்படுத்தலாம்.
*சுரைக்காய் ஜூஸ் சருமப் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்தாக கண்டறியப்பட்டு உள்ளது. புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கவும் எதிர்த்துப் போராடவும் இந்த சுரைக்காய் உதவியாக இருக்கும்.
இவ்வளவு சத்துக்களும் , நன்மைகளும், மருத்துவ குணங்களும் உடைய சுரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.