அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக போராட்டம் நடந்து வரும் நிலையில், அத்திட்டத்தில் மத்திய அரசு சில மாற்றங்களை அறிவித்துள்ளது
ராணுவம், விமானப்படை, கடற்படை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு துறையில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னி பாதை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 17.5 முதல் 21 வயதுள்ள இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர தகுதியுடையவர்களாவார்.
இந்தத் திட்டத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக, ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில், ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் குவித்து வருகின்றனர். பல இடங்களில் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தியதுடன், 2 ரயில்களுக்கும் தீவைக்கப்பட்டது. கல்வீச்சில் பெண் எம்.எல்.ஏ. காயமடைந்தார்.
இந்தநிலையில், அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- அக்னி பாதை வீரர்களின் 4 ஆண்டு கால பணி முடிந்த பின்னர் அவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்படும். வங்கிக்கடன் மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் ஆகியவற்றுடன், மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில காவல்துறையில் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்ள முடியாததால், நடப்பாண்டில் மட்டும் வயது வரம்பை 23 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.