மும்பை: மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடு வானில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது.
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ320நியோ விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு காலை 9:43 மணிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட பிறகு சரியாக 27 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அதன் இன்ஜின் ஒன்று நடுவானில் செயலிழந்தது. இந்த தகவலானது கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த விமானிகள் துரிதமுடன் செயல்பட்டு காலை 10:10 மணிக்கு மீண்டும் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினர். இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, ஏர் இந்தியா பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது, எங்கள் பணியாளர்கள் இந்த சூழ்நிலைகளை கையாளுவதில் திறமையானவர்கள்.
எங்கள் பொறியியல் மற்றும் பராமரிப்பு குழுவினர் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும், மற்றொரு விமானம் திட்டமிட்டபடி பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருவுக்கு புறப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
This website uses cookies.