நடுவானில் இயந்திரக்கோளாறு…அவரசமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: மும்பையில் பரபரப்பு..!!

Author: Aarthi Sivakumar
20 May 2022, 2:52 pm
Quick Share

மும்பை: மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடு வானில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது.

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ320நியோ விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு காலை 9:43 மணிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட பிறகு சரியாக 27 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அதன் இன்ஜின் ஒன்று நடுவானில் செயலிழந்தது. இந்த தகவலானது கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த விமானிகள் துரிதமுடன் செயல்பட்டு காலை 10:10 மணிக்கு மீண்டும் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினர். இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, ​​ஏர் இந்தியா பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது, எங்கள் பணியாளர்கள் இந்த சூழ்நிலைகளை கையாளுவதில் திறமையானவர்கள்.

எங்கள் பொறியியல் மற்றும் பராமரிப்பு குழுவினர் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும், மற்றொரு விமானம் திட்டமிட்டபடி பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருவுக்கு புறப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

Views: - 263

0

0