மேடையில் பாடிக் கொண்டிருந்த பிரபல பாடகி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கார் பசந்த் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாய். நகரில் நடக்கும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடி வருகிறார். இவர் பீகாரின் பாட்னா நகரில் நடந்த கலாசார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது, ஆடல், பாடலுடன் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, பலரும் மேடையை நோக்கி பணமழை பொழிந்தனர். அந்த சமயம் பாடகி நிஷா உபாத்யாய் மீது கூட்டத்தில் இருந்த நபர், திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது இடது தொடையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் பரவி வைரலாகி வருகிறது.
இதையடுத்து, அவர் மீட்கப்பட்டு பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவரது நிலைமை சீரடைந்துள்ளது. இதுபற்றி அவர் போலீசில் புகார் எதுவும் அளிக்காத நிலையில், நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.