மணிப்பூரில் 3 குழந்தைகளின் தாயை வீட்டிற்குள் புகுந்து, பாலியல் வன்கொடுமை செய்து உயிரோடு எரித்துக் கொன்றதாக பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.
இம்பால்: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக வன்முறை நிகழ்ந்து வருகிறது. அங்கு காணப்படும் மைத்தேயி மற்றும் குகி ஆகிய பழங்குடியினர் இடையே இந்த மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு இந்த வன்முறைச் சம்பவங்களால் பலர் பாதிக்கப்பட்டு, தங்களது வாழ்வாதாரம், உறவுகள் ஆகியவற்றை இழந்துள்ளனர்.
குறிப்பாக, ஒரு பெண் நிர்வாணமாக பல ஆண்கள் முன்னால் துரத்தப்பட்டு வெளியான வீடியோ, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் போலீஸ் தடியடிகளுக்குப் பின்னால் ஓரளவு மணிப்பூரில் நிலமை கட்டுக்குள் இருந்தது. இருப்பினும், ஆங்காங்கே மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன.
இதனிடையே நடந்த 2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் மேலோங்கியது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் மணிப்பூரின் ஜிமாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 3 குழந்தைகளின் தாய் ஒருவர் வீட்டினுள் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த கலவரக்காரர்கள், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து உயிரோடு எரித்துக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, மணிப்பூரில் வன்முறைச் சம்பவம் கட்டுக்கடங்காமல் மீண்டும் சென்று கொண்டிருக்கிறது. அதேநேரம், இதுகுறித்து பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித்தை வைத்து விஜயை தாக்கினாரா சத்யராஜ்? மேடைப்பேச்சால் சர்ச்சை!
அந்தப் புகாரில், தனது மனைவி 4, 5 கலவரக்காரர்களால் வீட்டினுள் புகுந்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எனது கண் முன்னே உயிரோடு எடுத்துக் கொல்லப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கப்பதிவு செய்துள்ள மணிப்பூர் போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.