அஜித்தை வைத்து விஜயை தாக்கினாரா சத்யராஜ்? மேடைப்பேச்சால் சர்ச்சை!

Author: Hariharasudhan
9 November 2024, 11:25 am

தமிழ் தேசியம் பேசுவது என்பது ஆரியத்திற்கு துணை போவதாக அர்த்தம் என நடிகர் சத்யராஜ் கூறினார்.

சென்னை: சென்னையில் நேற்று (நவ.8) ‘திராவிடமே தமிழுக்கு அரண்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ” திராவிடத்தை ஆரியம் எதிர்க்கலாம். ஆனால், தமிழ்தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ஆபத்து மிகுந்தது.

ஆரியத்துக்கு துணை போனால் மீண்டும் சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என மூடநம்பிக்கைகள் தழைத்தோங்கும். தற்போது தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ள இந்தக் காலத்தில், நமக்கு இருமொழிக் கொள்கை தான் முக்கியம்.தமிழ்நாட்டுக்கு வடமாநிலத்தவர்கள் நிறைய பேர் வேலை செய்ய வருகின்றனர். அவர்களுக்கும் திராவிடத்தை நாம் கொண்டு செல்ல வேண்டும்.

அவர்களுக்கு புரிந்த மொழியில் இதனை எடுத்துச் சொல்ல வேண்டும். வட மாநிலங்களில் சாதியப் பிரச்னைகள் அதிகமாக உள்ளன. தமிழகத்துக்கு வேலைக்கு வரும் பெரும்பாலான வட மாநிலத்தவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இங்கு வேலை செய்ய வருகின்றனர் என்றால், இங்கு சாதிய ஒடுக்குமுறை இல்லை, மதக் கலவரங்கள் இல்லை என்பதே, இதனால் நிம்மதியாக வாழலாம் என்று வருகின்றனர்.

இதற்கு திராவிடம் தான் காரணம் என்று புரிய வைக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று தமிழ்நாட்டைப் பற்றி பேசுவார்கள். இங்கே வட மாநிலத்தவர் சிறுசிறு வேலை நிமித்தமாக அதிகமாக வருகிறார்கள் என்றால், அதற்கு இங்கு உள்ளவர்கள் வேலை செய்யத் தயாராக இல்லை என்று அர்த்தம் கிடையாது. சிறிய வேலைகளையும் தாண்டி பெரிய இடத்தில் வேலை செய்யும் சூழலில் இங்குள்ளவர்கள் உயர்ந்து இருக்கிறார்கள் என்றே இதற்கு அர்த்தம்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ” தம்பி அஜித் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். பைக்கில் டூர் போவதை பற்றி வீடியோவில் அவர் கூறி இருந்தார்.திடீரென சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனுக்கு கோபம் வருகிறது என்றால், அதற்கு காரணம் மதம் மட்டுமே. ஏதோ ஒரு நாட்டுக்குச் செல்லும் போது ஒருவரை பார்க்கிறோம். எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் அங்கு கிடையாது.

ஆனால், அந்த மதம் தான் தேவையில்லாமல் ஒரு வெறுப்பை உருவாக்குகிறது என்று அழகான பதிவினை வெளியிட்டிருந்தார் அஜித். அவருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் பேசினார்.

இதையும் படிங்க: எல்லாரையும் விஜய் கேரவனுக்குள்ள விடுவாரா? ஒரே வார்த்தையில் ஆஃப் செய்த பிரபலம்!

முன்னதாக, திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசி இருந்தார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், அஜித்குமாருக்கு பாராட்டு தெரிவித்து, விஜய்யை எதிர்க்கும் அரசியலில் திராவிடர் கழகத்தினர் இறங்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Allu Arjun Pushpa 2 controversy பிறந்த நாள் NEXT..பிரெண்ட்ஷிப் FIRST…அல்லு அர்ஜுனை சந்தித்த பிரபல நடிகர்..இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
  • Views: - 161

    0

    0