எல்லாரையும் விஜய் கேரவனுக்குள்ள விடுவாரா? ஒரே வார்த்தையில் ஆஃப் செய்த பிரபலம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2024, 8:02 pm

தமிழ்நாடு முழுவதும் விஜய் அரசியல் பிரவேசம் குறித்துதான் பேச்சு எழுந்து வருகிறது.

முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளை அலறவிட்டார். அவர் பேசிய கொள்ளை மற்றும் கோட்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றன.

விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்த பின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்னத்தை முன் வைத்தது மட்டுமல்லாமல், விஜய்யை லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் என தரக்குறைவாக பேசினார்.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத விஜய், சீமானுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து சொல்லியது, அரசியல் நாகரீகமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க: கவர்ச்சி நடிகைகளுக்கே சவாலா? அசத்தல் போட்டோஸ்களை ரிலீஸ் செய்த அபியுக்தா.. !

இந்த நிலையில் பிரபல நடிகரும், முன்னாள் அரசியல்வாதியுமான எஸ்வி சேகர் செய்தியாளகளை சந்தித்தார்.

அப்போது விஜய் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பிய போது, எல்லாருக்கு எல்லாம் என சொல்லும் விஜய், கேரவனில் எல்லாரையும் விடுவாரா? தற்போதுதான் அரசியலுக்குள் வந்திருக்கிறார் விஜய். அவரை பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு படத்துக்கு 200 போடி ரூபாய் சம்பளம் வாங்கும் விஜய், என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்னும் 500 நாள் இருக்கு. 2026 தேர்தல்தான் முடிவு செய்யும். எம்ஜிஆர் கோடம்பாக்கத்தில் இருந்து நேரடியாக முதலமைச்சராகவில்லை. படிப்படியாக முன்னேறி முதல்வரானார். விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும் என கூறினார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?