39 தொகுதிகளுக்கும் லிஸ்ட் எடுங்க… பாஜக போட்ட உத்தரவு : தமிழகத்தில் டாப் கியரில் பாஜக!!!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது. இதையடுத்து அண்ணாமலையை டெல்லி வர சொல்லி பாஜக மேலிடம் ஆர்டர் போட்டது.
அங்கு சென்ற அண்ணாமலை அமித்ஷா, ஜேபி நட்டா, நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். பின்னர் இரு நாட்கள் கழித்து சென்னை திரும்பிய அவர், பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு ஆலோசனை கூறினார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி வாரியாக பாஜகவிற்கு பொறுப்பாளர்களை நியமிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன் இதுதொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்களாம்.
டுத்த வாரத்திற்குள் 39 தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வேட்பாளர்களை அடையாளம் கண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தொகுதி பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக சிறப்பாக செயல்படும் பாஜக நிர்வாகிகள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு தேசிய தலைமையிடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், பாஜக வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. பாஜக தலைமையில் கூட்டணி உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அடையாளம் காண திட்டமிட்டுள்ளது ஏன் என்ற கேள்விகளும் சிறகடிக்கின்றன.
ஒருவேளை எதிர்பார்க்கும் கூட்டணி அமையாவிட்டாலும் தேர்தல் பணிகளில் எவ்வித சுணக்கமும் இருக்கக்கூடாது என்பதற்கான ‘பிளான் பி’ தான் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கச் சொல்லியிருப்பதற்கான காரணம் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.